இந்தியா

சபரிமலை கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி: கொரோனா தடுப்பூசி சான்று அவசியம்

சபரிமலை கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி: கொரோனா தடுப்பூசி சான்று அவசியம்

JustinDurai

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 மாதங்களுக்குப் பின் நாளை முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை முதல் 21ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கவுள்ளன.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றும் அவசியம் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தெரிவித்துள்ளது. ஐந்து நாள் தரிசனத்திற்காக 25 ஆயிரம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர்.