இந்தியா

"ஏழ்மையை அகற்ற கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும்" - ரத்தன் டாடா

webteam

இந்தியாவில் குடிசைப்பகுதி மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க அபிவிருத்தி கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிசைகளை அகற்றி அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தந்தாலும் வேறு இடத்தில் புதிய குடிசைப்பகுதி உருவாவதாக ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கொள்கைகளை மறு சீரமைப்பு செய்வதே இதற்கு சிறந்த தீர்வு எனத் தெரிவித்துள்ளார். இந்திய நகரங்களில் குடிசைகள் இருப்பதை நினைத்து இந்தியாவின் கட்டடக் கலைஞர்கள் வெட்கப்பட வேண்டிவரும் என்றும், புதிய இந்தியாவின் அங்கமாக சவாலை ஏற்றுக்கொண்டு குடிசைப்பகுதி மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் நடந்த மாநாட்டில் ரத்தன் டா டா இவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில்  மக்கள் வாழ்வது கடினமான விஷயம் எனவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

மிக நெருக்கமான பகுதிகளில் வாழ்வதை தவிர்க்க கொரோனா வைரஸ் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரத்தன் டாடா  பேசியுள்ளார்.