சபரிமலை பக்தர்கள் புதியதலைமுறை
இந்தியா

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு Happy News.. புதிய திட்டத்தை தொடங்கி வைத்தது தேவஸ்வம் போர்டு

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இது அமைந்ததுள்ளது.

PT WEB

கேரள மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே அங்கு வரும் பக்தர்கள், தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் வீடு மற்றும் பிற இடங்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக தேவஸ்வம் போர்டு இலவச WIFI திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த கட்டணமில்லா WIFI வசதியை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு போர்டு தலைவர் பிரசாந்த் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, சன்னிதானம் நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புரம், ஆழி பகுதிகள், அப்பம்-அரவணா கவுண்டர்கள் மற்றும் மருத்துவமனை பகுதிகள் என 15 இடங்களில் திட்டம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்தர் முதல் அரை மணி நேரத்திற்கு இலவசமாக WIFI ஐ பயன்படுத்தலாம். அந்த அரை மணி நேரத்திற்கு பிறகு 9 ரூபாய் கட்டணம் செலுத்தி 1 GB டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 99 ரூபாய் திட்டத்தின் மூலம் மாதம் முழுவதும் தினசரி 2.5 GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிசம்பர் 30ம் தேதி முதல் மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரையிலான 27 மையங்களில் இலவச WIFI வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சார்பில் ஏற்கனவே பக்தர்கள் தரிசனத்திற்காக தங்கிச் செல்லும் "Q Complexes" களில் இந்த கட்டணமில்லா WIFI சேவையை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.