இந்தியா

“கத்தியுடன் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் தடுக்கப்பட்ட சிங்” - தலைமை நீதிபதிக்கு கடிதம்

“கத்தியுடன் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் தடுக்கப்பட்ட சிங்” - தலைமை நீதிபதிக்கு கடிதம்

webteam

சிறிய கத்தியுடன் நுழைந்த தன்னை உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கவில்லை என சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இளம் பயிற்சி வழக்கறிஞராக இருப்பவர் அம்ரித்பால் சிங் கல்சா. இவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைப்பாகையுடனும், குறுங்கத்தியுடனும் உச்சநீதிமன்றத்திற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளார். 6 இஞ்சுக்கும் அதிகமான அளவு குறுங்கத்தி வைத்திருந்ததால் அவர் தடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக அம்ரித்பால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “சட்டப்படி நான் குறுங்கத்தி மற்றும் தலைப்பாகை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளீர்கள். ஆனால் தினந்தோறும் நான் உச்சநீதிமன்றத்தில் கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாகிறேன். என்னை சிலர் தீண்டத்தகாதவர் போல நினைக்கின்றனர்.

இதனால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். இந்நிலையில் நேற்று என்னை குறுங்கத்தி வைத்திருந்த காரணத்திற்காக உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட அளவைவிட பெரிய கத்தியை வைத்திருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் சட்டத்தில் கத்தி அளவு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.