நாடெங்கும் கோடைக் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாவட்டங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் கோடை மழையும் பெய்து வருகின்றது. இன்னும் வரும் மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடு முழுவது ஐஸ்கிரீம், குளிர்பான விற்பனைகள் அதிகரித்து வருகின்றது. முன்கூட்டியே கோடை தொடங்கியதும்கூட ஐஸ்கிரீம், குளிர்பான விற்பனைகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஆலைகள் முழு திறனுடன் இயங்குவதுடன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் விற்பனை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமுல், மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வமாகவே தெரிவித்துள்ளன.
சமீபத்திய செய்தி: 'பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை' அதிரவைத்த ‘கே.ஜி.எஃப். 2’ வசூல் - ஒரு நாள் 'கலெக்சன்' எவ்வளவு?