டெல்லி காற்று மாசு twitter
இந்தியா

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு | விமான சேவை பாதிப்பு.. அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்!

டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராஜீவ்

டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில், குறிப்பாக டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு எதிர்ப்பு நடவடிக்கை செயல் திட்டம் (GRAP) நிலை-4 இன்று காலை 8 மணிமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் பி எஸ் - VI டீசல் பேருந்துகள் தவிர அண்டை மாநிலங்கள் இடையேயான டீசல் பேருந்துகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லிக்குள் லாரி போக்குவரத்து நுழைவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும்அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகள் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து LNG/CNG/எலக்ட்ரிக்/BS-VI டீசல் லாரிகள், டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

காற்று மாசு

மாநில அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டு வகுப்பு மாணவர்களைத் தவிற, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த முடிவெடுத்துள்ளது.

மேலும், பொது, நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% வீட்டிலிருந்து பணி செய்யவும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு உரிய முடிவை எடுக்கலாம்.

கல்லூரிகள்/கல்வி நிறுவனங்களை மூடுவது மற்றும் அவசரமற்ற வணிக நடவடிக்கைகளை மூடுவது, பதிவு எண்களின் ஒற்றைப்படை எண் அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசம், இருதயம் பிரச்சனை உள்ள நோயாளிகள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் முடிந்தவரை வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தல் கூறப்பட்டிருக்கிறது.

டெல்லியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசால் விமன சேவைகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளிவந்துள்ளது.