இந்தியா

டெல்லி: காற்றுமாசு மிக மோசமாக இருக்கும் நிலையில் பள்ளிகளை திறந்தது ஏன் - நீதிபதிகள்

டெல்லி: காற்றுமாசு மிக மோசமாக இருக்கும் நிலையில் பள்ளிகளை திறந்தது ஏன் - நீதிபதிகள்

kaleelrahman

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும் சூழலில், எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் வழக்கு விசாரணை தொடங்கியபோது, டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

வேலைகளுக்குச் செல்வோர் உள்ளிட்டோர் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளை மட்டும் ஏன் பள்ளிக்கு வர கட்டாயப் படுத்துகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் காற்று மாசுபாட்டை குறைப்பது சம்பந்தமாக பக்கம் பக்கமாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும் மத்திய அரசும் டெல்லி அரசும் நடைமுறையில் எதனையும் செய்யவில்லை எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.