குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 25-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவ்விழாவுக்கான முழு அளவிலான ஒத்திகை டெல்லியில் இன்று நடைபெற்றது. விஜய் சவுக் பகுதியில் நடந்த இந்த ஒத்திகையில் ஏராளமான அரசு வாகனங்களும் குதிரைப்படை அணிகளும் பங்கேற்றன.
இதற்கிடையில் ஓய்வு பெற உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு முப்படைகளின் தலைவர் என்ற முறையில் இன்று பிரி உபசார விருந்தளிக்கப்பட்டது. முப்படை வீரர்களுக்கான கமிட்டியின் தலைவர் அட்மிரல் சுனில் லான்பா இவ்விருந்தை வழங்கினார். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 25-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில் அவரின் செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கோத்தாரி பொதுத்துறை நிறுவன தேர்வாணைய தலைவராக இருந்து வருகிறார். மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக், புதிய குடியரசுத் தலைவர் கோவிந்தின் ஊடக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.