delhi minister resign PT
இந்தியா

நேற்று பஸ் டிப்போ திறப்பு; இன்று கட்சிக்கு முழுக்கு| கைலாஷ் கெலோட் ராஜினாமாவால் டெல்லியில் பரபரப்பு

கைலாஷ் கெலோட் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

PT WEB

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலோட், தன்னுடைய போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இந்த ராஜினாவை ஏற்றுக்கொண்டார். கைலாஷ் கெலோட் கவனித்து வந்த பொறுப்புகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கைலாஷ் கெலோட் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவரது முடிவு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. நேற்று கூட டெல்லியில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் பஸ் டிப்போவை இவர் திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைலாஷ் கெலாட் ராஜினாமா குறித்து ஆம் ஆத்மி சஞ்சய் சிங் :-

“கைலாஷ் கெலாட்யின் ராஜினாமா பாஜகவின் கேவலமான அரசியல் மற்றும் சதியின் ஒரு பகுதியாகும். ED-CBI ரெய்டு நடத்தி கைலாஷ் கெலாட் மீது அழுத்தம் ஏற்படுத்தப்பட்டு, இப்போது பாஜக கொடுத்த ஸ்கிரிப்ட் படி அவர் பேசுகிறார். டெல்லி தேர்தலுக்கு முன்பே மோடி வாஷிங் மெஷின் செயலில் இறங்கியுள்ளது.

இப்போது பல தலைவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் பாஜகவில் சேர்க்கப்படுவார்கள்” என்றார்.

கைலாஷ் கெஹ்லோட் ராஜினாமா குறித்து பாஜக தேசிய செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா:-

"ஆம் ஆத்மி படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். கைலாஷ் கெலாட், நாங்கள் எப்பொழுதும் சொல்வதை எல்லாம் தற்போது ஊர்ஜிதம் செய்துள்ளார்.

இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

இதனிடையே, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பாஜக முன்னாள் எம் எல் ஏ அனில் ஜா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.