IAS students death pt desk
இந்தியா

தலைநகரை சோகத்தில் மூழ்கடித்த மாணவர்கள் உயிரிழப்பு - சம்பவம் நடந்தது எப்படி? கிராபிக்ஸ் விளக்கம்

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை வரை போராட்டம் தொடரும் என்று ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

webteam

டெல்லி பழைய ராஜேந்திரன் நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி நிலையத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு தொடங்கிய மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

IAS Training center

மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சில மாணவர்களுடைய உடல்நலம் குறித்து எந்த தகவலையும் மாணவர்களிடம் காவல்துறை பகிரவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளையும் மாணவர்களுக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை தங்களின் போராட்டம் இரவு முழுவதும் தொடரும் எனவும், அவர்கள் இருவரும் நேரில் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு தெரிய வரும் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் ஏபிவிபி போன்ற அரசியல் சார்ந்த மாணவர்கள் பிரிவினரும் தங்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் எனவும் மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஐஏஎஸ் பயிற்சி பெற்று வந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 13 சிவில் சர்வீஸஸ் நிறுவனங்களின் அடித்தளங்களை எம்சிடி சீல் வைத்துள்ளது.

இதனிடையே, மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது குறித்து கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..