இந்தியா

பீஸ் கட்டாத குழந்தைகளை பேஸ்மென்ட்டில் சிறை வைத்த பள்ளி: டெல்லியில் அதிர்ச்சி

பீஸ் கட்டாத குழந்தைகளை பேஸ்மென்ட்டில் சிறை வைத்த பள்ளி: டெல்லியில் அதிர்ச்சி

webteam

கட்டணம் செலுத்தாத நர்சரி குழந்தைகளை பேஸ்மென்ட்டில் அடைத்து வைத்ததாக, பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஹாஸ் காஸி பகுதியில் இருக்கிறது ரபியா பெண்கள் பப்ளிக் பள்ளி. இங்கு ஏராளமானோர் படித்து வருகின்றனர். இங்குள்ள நர்சரி பள்ளியிலும் பல சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்கூல் முடிந்ததும் வழக்கம் போல குழந்தையை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றார் ஒருவர். அப்போது, வழக்கமாக இருக்கும் இடத்தில் குழந்தை இல்லை.  அங்குள்ள நிர்வாகி ஒருவர், ‘நீங்க பீஸ் கட்டலையா, அப்ப குழந்தை பேஸ்மெண்ட்ல இருக்கும், பாருங்க’ என்று கூறியுள்ளார். அதோடு பீஸ் கட்டாததற்கு இதுதான் தண்டனை என்றும் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேஸ்மென்ட் சென்று பார்த்தார். அங்கு சுமார் 16 குழந்தைகள் பசியோடும் ஃபேன் கூட இல்லாமலும் பரிதவித் து இருந்ததைக் கண்டார். இதுபற்றி மற்ற குழந்தைகளின் பெற்றொருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது பற்றிய புகைப்படங்கள் உடனடியாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது.

இதுபற்றி ஜியாவுதின் என்பவர் கூறும்போது, ‘என் ஐந்து மகள் இங்கு படிக்கிறாள். அவளை அழைத்துப்போக வந்தேன். ஆனால் காணவில்லை. விசாரித்தபோது பீஸ் கட்டாத குழந்தைகளுக்கு தண்டனையாக பேஸ்மென்ட்டில் வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்து உடனடி யாக அங்கு சென்று பார்த்தேன். என் மகளுடன் 16 சிறுமிகள் அங்கு இருந்தனர். அனைவரும் வியர்த்து விறுவிறுத்து இருந்தனர். அந்த இடம் கடும் வெப்பமாக இருந்தது. உள்ளே ஃபேன் இல்லை. இது கொடூரமானது’ என்றார். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் சிலர் போலீ சில் புகார் செய்தனர். போலீசார் அந்தப் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பள்ளியின் தலைமையாசிரியை ஃபாரா திபா கூறும்போது, ‘குழந்தைகள் பேஸ்மென்டில்தான் விளையாடுவார்கள். அதற்கா கத்தான் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். இரண்டு ஆசிரியைகளும் உடன் இருந்தனர். அங்கு இருந்த ஃபேன் ரிப்பேராகிவிட்டதால் செயல் படவில்லை. மற்றபடி பள்ளிப் பற்றிச் சொல்லப்படுகிற எதிலும் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.