இந்தியா

2ஜி அலைக்கற்றை வழக்கு: திமுக எம்பிக்கள் ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ்

webteam

2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார்கள். இதற்கிடையே வழக்கை நீதிமன்றம் துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

அதன்படி  2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.