இந்தியா

அரசுப்பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் டெல்லி அரசு

அரசுப்பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் டெல்லி அரசு

webteam

அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசே செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படிஇதுவரை ஐந்து பாடங்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த பட்டியலின மாணவர்கள் இனி 1200 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும்.  ஐந்து பாடங்களுக்கு 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த பொதுப்பிரிவு மாணவர்கள் இனி 1500 ரூபாய் செலுத்தவேண்டும் என அறிவித்தது. 


மேலும் 12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்கு பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணமும் 300 ரூபாய் எனவும் இரட்டிப்பாக்கப்பட்டது. 

இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசே  செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர் மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணத்தையும் பள்ளி வசூலிக்கக்கூடாது என்ற சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.