இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பல ரயில்களை ரத்து செய்தது வடக்கு ரயில்வே!

டெல்லி விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பல ரயில்களை ரத்து செய்தது வடக்கு ரயில்வே!

Veeramani

மத்திய அரசுக்கும் விவசாயிகள் தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தொடரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக பல ரயில்களை ரத்து செய்துள்ளது வடக்கு ரயில்வே.

டெல்லி, பஞ்சாப் மற்றும் பிற எல்ல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து எதிர்ப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையில், அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாபின் பிற முக்கிய இடங்களுக்கு இடையே இயங்கும் பல ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் கூறும்போது, "கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 32 கி.மீ நீளத்தைத் தவிர்த்து மற்ற முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை இயல்பாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அரசுக்கும். விவசாயிகளுக்கும் இடையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தால், ரயில் சேவைகளை நிறுத்தி வைத்திருப்பதால் கடந்த 2 மாதங்களாக அரசுக்கு ரூ.2,220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தகக்து.