இந்தியா

வேளாண் சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்

Veeramani

மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இப்பிரச்னை தொடர்பாக குழு அமைக்கவும் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் தொடரும் போராட்டம் பற்றிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் “விவசாயிகளின் நிலத்தை நாங்கள் பாதுகாப்போம், எந்தவொரு விவசாயிகளின் நிலத்தையும் ஒப்பந்த விவசாயத்திற்கு விற்க முடியாது என்று இடைக்கால உத்தரவையும் பிறப்பிப்போம். சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை பற்றியும், போராட்டங்களால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

எங்களிடம் உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம், சட்டத்தை இடைநிறுத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளதுஆனால் சட்டத்தை இடைநிறுத்துவது வெற்று நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு குழுவை அமைப்போம், அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன்பின்னரே நடவடிக்கை எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, சுமூக தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கட்டும். குழு அமைப்பதை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்

வேளாண் சட்ட பிரச்னைகளை தீர்க்க குழு அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை மத்திய அரசு வரவேற்றுள்ளது.