டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி மற்றும் அதன் எல்லையில் பல்வேறு விவசாய அமைப்பினர் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 38-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையே டெல்லியில் கடுமையான குளிர், மழை நிலவுவதால் பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். சில விவசாயிகள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார். விவசாயிகளின் உயிரிழப்புக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டுமென பாரதிய கிசான் சங்கம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.