இந்தியா

காவிரி மட்டுமல்ல 'ஹைவே'யும் காத்திருக்கிறது பிரதமருக்காக !

காவிரி மட்டுமல்ல 'ஹைவே'யும் காத்திருக்கிறது பிரதமருக்காக !

டெல்லி மற்றும் மீருட் நகரங்களை இணைப்பதற்காக ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே சாலை திட்டத்துக்கு 2011 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விறுவிறுவென தொடங்கப்பட்டது. இந்தச் சாலை மீருட் நகரை மட்டும் இணைப்பது மட்டுமல்லால் டெல்லியின் புறநகர் பகுதிகளா நொய்டா, குர்கான் ஆகிய இடங்களையும் இணைக்கிறது. இந்தச் சாலை போடப்பட்டதற்கான முக்கிய காரணம், டெல்லி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகத்தான். இந்தச் சாலை திறக்கப்படுவதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் வாகனங்கள் டெல்லி நகர் போக்குவரத்து நரிசலில் இருந்து தப்பிக்கும்.

135 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே, 500 நாளில் அமைத்து முடிக்கப்பட்டது. ரூ,11 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, அறிவிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முன்பாகவே முடிந்தது. 6 வழிச்சாலையான இது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி முழுப் பணியும் முடிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சாலை ஓரங்களில் சுமார் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி வாழ் பொது மக்களுக்கு மிகவும் பயன்படும் இந்தச் சாலையை இன்னும் திறக்காமல் காவிரி விவகாரம் போல் மத்திய காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாலையை ஏன் திறக்கவில்லை என மத்திய அரசிடம் கேள்விகேட்டது, அதற்கு "பிரதமர் வந்து திறப்பதற்காக காத்திருக்கிறோம்" என மத்திய அரசு பதில் தெரிவித்திருந்தனர். இதற்கு நீதிபதிகள் "மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. ஜூன் 1 ஆம் தேதிக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஈஸ்டர்ன் ஹைவே திறக்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டனர்.