இந்தியா

குடும்பத்தினரிடம் பேச வீடியோ கால் வசதி - குஷியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள்

குடும்பத்தினரிடம் பேச வீடியோ கால் வசதி - குஷியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள்

webteam

டெல்லியில் கொரோனா நோயாளிகள் அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள மருத்துவமனையில் வீடியோ கால் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் திறக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் உறவினர்களிடம் நோயாளிகள் பேசி மகிழலாம். கொரோனா நோயாளிகளை பார்க்கவும், உடனிருக்கவும் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வசதியால் அவர்களின் உடல்நிலையை கேட்டறிய முடிவதாக கூறுகிறார் இந்த ஏற்பாட்டை உருவாக்கிய மருத்துமனையின் மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் ரித்து சக்சேனா.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது அவர்களின் மனதில் உருவாகும் பயம், பதற்றத்தை தணிக்கவும் இந்த வீடியோ அழைப்பு உதவுவதாக அவர் கூறுகிறார்.