டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
மாலை 4 மணி நிலவரப்படி 45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று டெல்லி மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், டெல்லி மாநகராட்சி தேர்தலும் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சற்றும் பரபரப்புக்கு குறையில்லாமல் டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன.
இவற்றில் பாஜக-வும் ஆம் ஆத்மி-யும் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் மிகக்கடுமையாக போட்டியிட்டன. மக்களை பொருத்தவரை எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, எந்த கட்சி வந்தாலும் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.