இந்தியா

போராட்டம் எதிரொலி: டெல்லியில் 19 விமானங்கள் ரத்து

போராட்டம் எதிரொலி: டெல்லியில் 19 விமானங்கள் ரத்து

webteam

டெல்லியில் நடந்த போராட்டத்தால் 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தால் டெல்லி முழுவதும் இன்று ஸ்தம்பித்தது. எல்லா சாலைகளும் முடங்கும் அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் விமானநிலையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் உட்பட பலர் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குருகிராமிலிருந்து தேசிய நெடுஞ்சாலையானது சுமார் ஏழு கிலோமீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசல்களில் முடங்கிப் போனது. ஆகவே விமான நிலையத்தின் பணியாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதனால் குறைந்தது 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 16 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இது குறித்து இண்டிகோ, “போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விமானநிலையத்தை அடைய தடைகள் ஏற்பட்டன. ஆகவே கால அட்டவணைகளை மாற்றினோம். ஏறக்குறைய டெல்லியில் இருபது விமான போக்குவரத்தை குறைத்தோம். இது தலைநகரில் இருந்து இயக்கப்படும் 10 சதவீத ஆகும். ஏர்லைன்ஸ் இருந்து விமானங்களை குறைக்க கூறி அறிவுறுத்தினர். மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் குறைக்க வேண்டும் என்று இண்டிகோ தெரிவித்தது. அதனை அடுத்து பயணிகளை குருகிராம் ஹோட்டலில் தங்க வைத்தோம்” என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் விமான நிலைய ஊழியர்களால் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய முடியாததால், மொத்தம் 16 விமானங்களும் தாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து எட்டு விமானங்கள் 20 முதல் 100 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.