இந்தியா

வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த கெஜ்ரிவால்

வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த கெஜ்ரிவால்

webteam

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 21 மையங்களில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது. ஆட்சியமைக்க ‌36 இடங்கள் தேவை என்‌ற நிலையில் 61 இடங்களில் ஆம் ஆத்மியும், 8 இடங்களில் பாஜகவும் வென்றுள்ளது. இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் அங்கும் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

இதன்மூலம் 3வது முறையாக தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அத்துடன் கூட்டணியுடன் சேர்த்து 67 இடங்களில் காங்கிரஸ் டெபாசிட்டையும் இழந்துள்ளது.

ஆம் ஆத்மியின் மாபெரும் வெற்றியை அக்கட்சியினர் ஆடிப்‌பாடி கொண்டாடினர். கொண்டாட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வெற்றி தமது வெற்றி அல்லவென்றும், டெல்லி மக்களின் வெற்றி என்றும் கூறினார். இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தனது பிறந்த நாளை உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடினார். அவரும் முதலமைச்சரும், கணவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் கேக்கை பறிமாறிக்கொண்டனர். தேர்தலின் வெற்றியை தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசாக அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.