இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் OLX தளத்தில் பண மோசடி.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் OLX தளத்தில் பண மோசடி.!

JustinDurai

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல ஆன்லைன் விற்பனை தளமான OLX-இல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனைப் பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகியுள்ளார். அப்போது சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து, 'லிங்கை ஸ்கேன் செய்யுங்கள், பணம் உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்' என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதை நம்பி அவர் ஸ்கேன் செய்ய, ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 பணம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆனது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா அந்த நபரிடம் தன்னிடமிருந்து பணம் டிரான்ஸ்பர் ஆனது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், தான் தவறான பார் குறியீட்டை அனுப்பி விடதாகவும், மற்றொரு பார் கோடை அனுப்பி, பணத்தைப் பெறுவதற்கு அதே நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டார். அவர் பார் கோடை ஸ்கேன் செய்தபோது, ஹர்ஷிதா மேலும் ரூ.14,000 பணத்தை இழந்தார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஹர்ஷிதா, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் போலீசார் கூறினர்.