டெல்லி விமான நிலையம் புதிய தலைமுறை
இந்தியா

டெல்லியில் தொடரும் கனமழை - விமானநிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 6 பேர் காயமடைந்துள்ளனர். பலரின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லி கடந்த சில நாட்களாக கடும் வெயிலும்,கடும் தண்ணீர் பஞ்சமும் நிலவிவந்தது. இந்த சூழலில், வெயில் படிப்படியாக குறையவே தற்போது கனமழை வெளுத்து வாங்கி கொண்டுவருகிறது.

இந்நிலையில், இன்று பெய்ந்த கனமழை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரையே இடிந்துவிழுந்துள்ளது. டெல்லி விமான நிலையத்தியத்தின் T1, T2, T3 மூன்று முனைகள் உள்ளன. இதில், இன்று காலை பெய்த கனமழை காரணமாக, T1 முனையத்தில் மேற்கூரை வாகனங்கள் மீது இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, மக்கள் குறைவாக வந்துசெல்லும் விமான நிலையத்தின் T1 முனையத்தின் மேற்கூரை சரிசெய்யும் வரை அங்கு வந்துசெய்யும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிலையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆனால், T2 மற்றும் T3 முனைகள் மூலம் சேவைகள் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். இந்நிலையில், அங்கு தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து காரணமாக, பல பயணிகள் வாகனங்கள் சேதம் என அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். இந்தவகையில், கனமழையால் கூரை சரிந்ததன் காரணம் என்ன என்பதை கண்டறிய தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது.

மேலும், தொடர்கனழமை பெய்து வரும்நிலையில், டெல்லியின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.