தூசியினால் நிறைந்த டெல்லி புதியதலைமுறை
இந்தியா

காற்று மாசு அதிகரிப்பால் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை - டெல்லியின் நிலை எப்படி இருக்கு?

தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு... தீபாவளிக்கு வெடிவெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Jayashree A

தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு... தீபாவளிக்கு வெடிவெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்துள்ளதால் தலைநகரானது பனிமண்டலம் சூழ்ந்தது போன்று காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால், அப்பகுதி மக்களின் உடலில் சுவாசக்கோளாறு, அதிகவெப்பம் போன்றவற்றை அனுபவித்து வருகின்றனர்.

சாதாரணமாக தூசியின் அளவானது AQI 100 கீழிருக்கவேண்டும். ஆனால், டெல்லியில் அதிகபட்சமாக நேற்று (Air Qyality Index ) AQI 356 பதிவானதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி காற்றின் மாசுபாடானது அப்பகுதியில் சற்று குறைந்து AQI 328 ஆக பதிவிடப்பட்டுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் CPCB (Central Pollution Control Board) படி டெல்லியில், ஆனந்த் விஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கணக்கின்படி AQI 357 ஆக பதிவு செய்யப்பட்டதாகவும், கடந்த வாரத்தில் இப்பகுதியில் அளவானதுAQI 405 ஆக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம் அஷர்தாம் கோவிலைச்சுற்றிய பகுதிகளில் காற்றின் மாசுப்பாடானது நேற்று AQI 261 ஆக இருந்த நிலையில், இன்று அப்பகுதியில் காற்றின் மாசுப்பாடானது சற்று அதிகரித்து AQI 357 இருப்பதாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதனாலும் மரக்கட்டை போன்றவை எரிப்பதனாலும், மேலும் இப்பகுதியில் காற்றானது மேலும் மாசுப்படக்கூடும் என்பதால் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கும், மரக்கட்டை போன்றவை எரிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரம் முழுதுமே காற்றின் தரமானது மிகவும் மோசமானவகையில் இருக்கக்கூடும் என்று SAFAR கணித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.