இந்தியா

எச்சரிக்கை அளவை மீறி பெருக்கெடுக்கும் யமுனை.. டெல்லியில் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்

எச்சரிக்கை அளவை மீறி பெருக்கெடுக்கும் யமுனை.. டெல்லியில் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்

webteam

டெல்லியின் பெருமையாக உள்ள யமுனை நதியில் சனிக்கிழமையன்று காலை எச்சரிக்கை அளவையும் மீறி நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. ஆனால் அதன் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, பழைய ரயில்வே பாலத்தில் காலை 10 மணிக்கு 204.23 மீட்டர் நீர்மட்டம் பதிவாகியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு 204.41 மீட்டர், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 203.77 மீட்டர் என்றும் நீர்ப்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஹரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து காலை 8 மணிக்கு 7.173 கியூசெக் என்ற விகிதத்தில் நீர் யமுனாவில் திறந்துவிடப்பட்டது.

டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளிக்கிழமை யமுனையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிழக்கு டெல்லி மாவட்ட நிர்வாகம், நிலைமையை சமாளிக்க 24 படகுகளை, தலா இரண்டு நீரில் மூழ்கும் பணியாளர்களுடன் தயார்நிலையில் வைத்துள்ளது.