இந்தியா

அன்று ஆசிரியர்... இன்று தள்ளுவண்டி வேலை; கொரோனாவால் மாறிய வாழ்க்கை

அன்று ஆசிரியர்... இன்று தள்ளுவண்டி வேலை; கொரோனாவால் மாறிய வாழ்க்கை

webteam

டெல்லியில் பள்ளி ஒன்றில் ஒப்பந்த ஆங்கில ஆசிரியராக இருந்தவர் வேலையில்லாததால் தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதைதடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் அவற்றில் சில இயங்கி வருகின்றன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் சம்பளம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.

பல தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கட்டணத்தை கட்ட சிரமப்பட்டு வருகின்றனர். கட்டணம் வாங்காததால் சம்பளம் கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் ஒப்பந்த ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வசிர் சிங். தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தேன். மே 8 முதல் எனக்கு சம்பளம் வரவில்லை. இதனால் வேறுவழியின்றி காய்கறி விற்பனையில் இறங்கியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.