இந்தியா

இந்தியாவில் தாமதமாகும் கார் உற்பத்தி! என்ன காரணம்?

இந்தியாவில் தாமதமாகும் கார் உற்பத்தி! என்ன காரணம்?

webteam

மின்னணு சிப் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் சுமார் ஆறரை லட்சம் கார்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் சிப் இல்லாததால் 3 லட்சத்து 40 ஆயிரம் கார்கள் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, ஹூண்டாய், மஹிந்தரா அண்டு மஹிந்தரா ஆகிய நிறுவனங்கள் சுமார் 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு வாகனத்துறை மீட்சியடைந்து வந்த நிலையில், தற்போது சிப் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் புதிய வாகனங்களுக்கு பதிவு செய்து விட்டு காத்திருக்கும் நிலை உள்ளது. வழக்கத்தை விட 2 முதல் 9 மாதங்கள் வரை கூடுதலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.