ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முப்படைகளுக்கும் தேவையான கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரிய அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) முடிவெடுக்கும். இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா தலைமையில் இன்று நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய கடற்படையில் உள்ள 2 கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளும், அர்ஜூன் பீரங்கிகளுக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு
இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.