கொரோனா பரவல் அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணமாக சொல்வதற்கு பாபா ராம்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா திருவிழாதான் காரணம் என்றும் கொரோனா பரவல் நிலைமையை எதிர்கொள்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் பிரச்சாரம் செய்யும் வகையில் 'டூல்கிட்' ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த 'டூல்கிட்'டுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், ''டூல்கிட் தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி நடந்துள்ளது. இது பெரிய குற்றம். 100 கோடிக்கு மேற்பட்ட இந்துக்களை அவமதிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். இத்தகைய இந்து விரோத, இந்திய விரோத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
கும்பமேளாவை கொரோனா பரவலுடன் முடிச்சு போடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் கும்பமேளாவை விமர்சிப்பது, இந்துக்களின் நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயல் எனவும் பல்வேறு மடாதிபதிகள், இந்து ஆன்மீக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.