டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி அரசு துணைநிலை ஆளுநருக்கு அளித்துள்ள பரிந்துரைகளின்படி, தற்போது அமலில் உள்ள வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையிலான வார இறுதி ஊரடங்கு உத்தரவை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்கள் நூறு விழுக்காடு ஊழியர்களையும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி 50 சதவிகித ஊழியர்களை அலுவலகங்களுக்கு அனுமதிக்க டெல்லி அரசு முடிவு மேற்கொண்டுள்ளது.