பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையோ 1,225,561 ஐ எட்டியுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு நிலவரம் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்த பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முதன்மையானது என்று தெரிவித்துள்ள அவர், கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தற்போது முடிவெடுக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.