உத்தரபிரதேச மாநிலத்தில் அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்ததில் பலியானோர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில் பெரோஸ் காந்தி அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் புதன்கிழமை வெடித்தது. இந்த விபத்தில், 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.