காத்மாண்டு புதிய தலைமுறை
இந்தியா

நேபாள் | கனமழையால் வெள்ளக்காடான காத்மாண்டு!

PT WEB

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பிரதான சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இடி, மின்னல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 -ஐ எட்டவுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.