இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!

webteam


உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் டெல்லி ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்புச் சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரின் உடலில், அவர் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றபோது அவர் வேதனையில் நாக்கை கடிக்க முயன்றதாகத் தெரிகிறது. அவரது நாக்கில் அதற்கான வெட்டுக்காயம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கூறும் போது “பாலியல் வன்கொடுமை கும்பலிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், நீதிபதியிடம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டார். இது தொடர்பாக அப்பகுதி காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களும், 307 ( கொலைச்சம்பவத்தில் ஈடுபடல்) மற்றும் 376 D (கூட்டு பாலியல் வன்கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் கூறும் போது “ பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற ஒன்பது நாட்கள் கழித்தே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பெண்ணின் குடும்பத்தை மிரட்டியுள்ளனர். பாஜக அரசு எங்கிருந்தாலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேற்றுகின்றனர் என்று பேசினார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டில் உள்ளது.