இந்தியா

பான் எண்-ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம்

பான் எண்-ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம்

webteam

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அரசின் எந்த ஒரு சமூக நலதிட்டங்களின் பலன்களையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் மானியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசமும் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.