இந்தியா

எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த மம்தா அரசின் முன்னாள் அமைச்சர் - பாஜகவில் இணைகிறாரா?

எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த மம்தா அரசின் முன்னாள் அமைச்சர் - பாஜகவில் இணைகிறாரா?

Veeramani

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அமைச்சரவையிலிருந்து விலகிய வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி, இன்று தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்

சில நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ராஜீப் பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்திற்கு வருகை தரும் நாளான இன்று தனது எம்.எல். பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். டோம்ஜூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜீப் பானர்ஜி, தனது ராஜினாமாவை சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் சமர்ப்பித்தார், மேலும் அவர் சட்டமன்றத்திற்கு வரும்போது மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை எடுத்துச் சென்றார். அவர் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாகவும் தெரிகிறது.

இந்த விலகல் குறித்து அவரிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரத் தயாராக உள்ளார் என தெரிவிக்கிறார்கள். அவர் தனது சமூக ஊடக பதிவில், "மேற்கு வங்க சட்டமன்றத்தின் உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்பது எனது மனமார்ந்த நன்றியுடன் தான். மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகும், எனது பதவிக்காலத்தின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் செய்த பணிகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் மிகவும் பாராட்டுகிறேன். என்னை நம்பியதற்காக டோம்ஜூர் தொகுதி மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன், உங்கள் அனைவருடனும் தங்கியிருந்து எதிர்காலத்தில் உங்கள் மற்றும் வங்காளத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்என தெரிவித்தார்.

ராஜீப் பானர்ஜி கடந்த ஜனவரி 22 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். முன்னதாக அவர் கட்சியை விட்டு வெளியேறலாம் என்ற ஊகத்தைத் தூண்டி “நான் மக்களுக்காக சில நல்ல வேலைகளைச் செய்ய விரும்பினேன், ஆனால் கட்சியில் சில நபர்கள் இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை" என்று கூறியிருந்தார்.