tomatoes pt desk
இந்தியா

”10 கிலோ தக்காளி வேணும்மா..” - அன்போடு கேட்ட தாய்.. துபாயிலிருந்து விமானத்தில் கொண்டுவந்த மகள்!

துபாயில் இருந்து இந்தியாவிக்கு வந்த பெண் ஒருவர், தனது தாய் 10 கிலோ தக்காளி வேண்டும் என்று கேட்டதற்கு அதை பெட்டியில் பத்திரமாக வைத்து இந்தியாவிற்கு எடுத்து வந்ததுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது .

PT WEB

நாட்டில் விலைவாசியானது தற்போது உச்சம் தொட்டுள்ளது. விலைவாசி நாள்தோறும் மாறிக்கொண்டும் ஏறிக்கொண்டும் தான் இருக்கின்றது. தற்போது அதில் நாயகனாக களம் கண்டுள்ளது தக்காளி என்றே கூறலாம். தக்காளி துவையல், தக்காளி ரசம், தக்காளி ஊறுகாய் என்று தக்காளியையே தடையமாக வைத்து குடும்பம் நடத்தியவர்கள் மத்தியில் தக்காளி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது. இப்படி இருக்க, ட்விட்டரில் வந்த ஒரு பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க துபாயில் இருந்து அவரது மகள் 10 கிலோ தக்காளியை விமானத்தில் கொண்டு வந்துள்ளார் என்பதுதான் அந்த சுவாரஸ்ய தகவல். அந்த பெண்ணின் சகோதரன் தான் இந்த பதிவை செய்திருந்தார்.

அதில், ”துபாயில் வசித்துள்ள எனது சகோதரி அவரது குழந்தைகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தியாவுக்கு வரத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாவிடம் ’உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் கொண்டு வருகிறேன்’ என்று என் அக்கா கேட்டார். அதற்கு அம்மா,"10 கிலோ தக்காளி வாங்கிவா" என்று விளையாட்டுத்தனமாக கூறியுள்ளார்.

dubai- tomatoes

அம்மாவின் கேட்டுக் கொண்டபடி 10 கிலோ தக்காளியையும் பத்திரமாக சூட்கேஸில் பேக் செய்து கொண்டு வந்தார் என் சகோதரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணைய வாசிகளிடையே அதிக  வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ட்விட் 52 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும் 700க்கும் மேற்பட்ட  லைக்குகளையும் பெற்றுள்ளது.  

மேலும்  பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களையும் தெரிவித்தும் வருகின்றனர். 

- ஜெனிட்டா ரோஸ்லின்