வங்கக் கடலில் டானா புயல் இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தமான் கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து வலுபெற்று வடமேற்கு நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது. இது இன்று புயலாக மாறி, நாளை மற்றும் மறுநாள ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.
இதன் காரணமாக இரு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மாநிலம் முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வும் கணித்துள்ளது.