உத்தரபிரதேசத்தில் அரசு பொருத்திய அடிபைப்பில் தண்ணீர் அடித்த பட்டியலின நபர் மீது ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள தெண்டுரா கிராமத்தில் அரசு சார்பாக அடி பைப் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த அடி பைப்பை அரசு அமைத்த நிலையில், ராமச்சந்திரன் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் அதில் தண்ணீர் அடித்து பயன்படுத்தியுள்ளார்.
இதனைக்கண்ட அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ராம்தயாள் என்பவர் ராமச்சந்திரனை கம்பால் அடித்து தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ராமச்சந்திரன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பொருத்திய அடிபைப்பை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும், பட்டியலின மக்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் இரு மாதங்களுக்கு முன்பே பிரச்னை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அப்போதே புகாரளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றம் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்துள்ளது. இந்நிலையில் பட்டியலின நபர் தற்போது தாக்கப்பட்டுள்ளார்