கேரளாவில் ஒரே நாளில் மேலும் 41,953பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்ணிக்கை 17,43,923 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் 58 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 5,565 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,75,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியது:
’’கேரளாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரேநாளில் மேலும் 41,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,43,923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இன்று 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 5,565 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 23,106 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 13,62,363 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்புடன் 3,75,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் 6,466, கோழிக்கோடு , திரிச்சூர் 5,078, திருவனந்தபுரம் , மலப்புரம் 3,267, கோட்டயம் 3,174, பாலக்காடு 1,048, கொல்லம் 2,946, ஆலப்புழா 2,947, கண்ணூர் 1,906, இடுக்கி 1,326, பத்தனம்திட்டா 1,236, வயநாடு 868 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’’