இந்தியா

இன்றிரவு குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் வாயு புயல்

webteam

வாயு புயல் வலுவிழந்த நிலையில் குஜராத்தின் கடற்கரை பகுதியில் இன்று இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது பின்னர்  அதிதீவிர புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு வாயு எனப் பெயரிடப்பட்டது. வாயு புயல் குஜராத்தை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பின்னர் புயல் வழிமாறியது. அதன்படி குஜராத்தின் கடற்கரை பகுதிகளான வேராவல்,‌ போர்பந்தர் மற்றும் துவாரகாவை ஒட்டியே புயல் கடந்து செல்லக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. 

இந்நிலையில் வாயு புயல் வலுவிழந்த நிலையில் குஜராத்தின் கடற்கரை பகுதியில் இன்று இரவு  கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் 5 தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது. புயல் வலுவிழந்த நிலையில் காற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், ஆனால் கடுமையான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

குறிப்பாக குட்ச் மாவட்டம் கடுமையான மழைப்பொழிவை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய குட்ச் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் இருக்கின்றனர். கடற்கரை ஓர மக்கள் மக்களுக்கு உரிய பாதுகாப்பும், விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.