புயல் pt web
இந்தியா

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி; மேற்கு வங்கம் - ஒடிசா அருகே கரையை கடக்குமென தகவல்!

ஓசூர், பாகலூர், பேரிகை, ஜுஜுவாடி, காமராஜ் நகர், சின்ன எலசகிரி, முகண்டப்பள்ளி, கோனேரிப்பள்ளி, சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதேபோல மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 48 மணிநேரத்தில் புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த புயலுக்கு டானா (DANA) என பெயரிடப்பட்டுள்ளது.

டானா புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்கம் - ஒடிசா கடற்கரை பகுதியில் வரும் 24ஆம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஆங்காங்கே தொடரும் மழை...

மற்றொருபக்கம் தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஓரிரு இடங்களில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. அதில் கிருஷ்ணகிரியில் பெய்து வரும் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஓசூர், பாகலூர், பேரிகை, ஜுஜுவாடி, காமராஜ் நகர், சின்ன எலசகிரி, முகண்டப்பள்ளி, கோனேரிப்பள்ளி, சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. குளம் போல் மாறியுள்ள சாலையில், செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேடு, பள்ளம் தெரியாமல் வாகனங்கள் மெதுவாக செல்வதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தவுடன் தண்ணீர் விரைந்து வடிய வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.