புயல்  கோப்பு புகைப்படம்
இந்தியா

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பைபர்ஜாய்! - இந்தியாவுக்கு பாதிப்பா? பெயர் காரணம் இதுதான்!

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள 'பிபோர்ஜாய்' புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Justindurai S

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பைபர்ஜாய்' என்று வங்கதேசம் பெயரிட்டுள்ளது. இந்தப் பெயருக்கு வங்கத்தில் ’பேரழிவு’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு அரபிக்கடலில் உருவாகியிருக்கும் முதல் புயல் 'பைபர்ஜாய்' ஆகும்.

புயல்

இந்தப் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்தப் புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலங்கள் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 'பைபர்ஜாய்' புயல், மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தற்போது 'பைபர்ர்ஜாய்' அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, மிகக் கடுமையான சூறாவளி புயலான பிபோர்ஜாய், கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15ஆம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

புயல்

இந்த புயல் நேரடியாக இந்தியாவை தாக்காது என்றும், இந்திய கடல் பகுதியில் கரையை கடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. மிக தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும்போது மணிக்கு 150 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே ஆண்டில் இரண்டு சூப்பர் புயல்கள்

அரபிக் கடலில் வலுவடைந்து இருந்த அதிதீவிர புயலான பைபர்ஜாய் மிக அதிதீவிர புயலாக மாறி தற்போது சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் புயல் பைபர்ஜாய். வங்கக் கடலில் மே மாதம் உருவான மோக்கா புயல் மே 15ஆம் தேதி கரையை கடந்தது.

திசை மாறிய பிப்பர்ஜாய் புயல்

அரபிக் கடலில் உருவான புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் அல்லது கடலிலேயே வலுவிழக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்தியாவை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது சற்று வலுவிழந்து மிக அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.