இந்தியா

எங்கு இருக்கிறது Amphan புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை என்ன?

எங்கு இருக்கிறது Amphan புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை என்ன?

webteam

amphan புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் பகுதியில் நிலவுகிறது. வட திசையில் 11 கிமீ வேகத்தில் நகரும் புயல், ஒடிஷாவில் இருந்து 700 கிமீ தொலைவிலும் மேற்கு வங்கத்தில் இருந்து 860 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இப்புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, 20 ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலை மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும். அப்போது 165- 175 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிக அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வடக்கு வங்கக் கடல் மற்றும் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது