கொரோனா பரவலைத் தடுக்க தொழிற்சாலைகள், அலுவலகங்களை ஏப்ரல் 14 வரை மூட உத்தரவிடப்பட்டதால், மக்கள் வேலையின்றி
வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இதனையடுத்து வேலை பாதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படுவதைக் கருதி, கடன்களுக்கான மாதத்
தவணைகளை வங்கிகள் 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி அளித்தது.
அதையடுத்து, வங்கிகளும் அந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இஎம்ஐ-யை நீட்டிப்பு செய்கிறோம் எனக்கூறி
வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து தகவல்களை பெறுகிறார்கள். அவர்களது OTPயையும் பெற்றபிறகு பண மோசடி நடக்கிறது. எனவே கவனமுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.