ஆந்திர பெண்கள் எக்ஸ் தளம்
இந்தியா

சயனைடு கலந்த பானம்.. கொலைசெய்து பொருள் திருட்டு.. 3 சீரியல் கில்லர் பெண்கள் கைது!

ஆந்திராவில், 4 பேரை சயனைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Prakash J

ஆந்திரப் பிரதேசம் தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா. நடுத்தர வயதைச் சேர்ந்த இந்த பெண்மணிகள் மூவரும் தங்கம், பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைப்பார்களாம். பின்னர் அவர்களிடம் அன்பாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைப்பார்களாம். அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் வெகுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்களாம்.

இதுபோல், அவர்கள் கொடுத்த சயனைடை குடித்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார்களாம். இதுதொடர்பாக ஆந்திர போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில், 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடங்களில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேரை சயனைட் மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சச்சின்கூட லிஸ்ட்ல இல்லை! 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை; ஆலி போப் படைத்த புதிய சாதனை!