இந்தியா

123 அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு - அனுமதி கிடைக்குமா?

123 அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு - அனுமதி கிடைக்குமா?

webteam

ஊழல் தொடர்பாக 123 அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையத்திடம் நிலுவயிலுள்ள புகார்கள் குறித்து தகவலகள் வெளியாகியுள்ளது. 

அதன்படி மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 123 பேர் மீது ஊழல் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்காக 4 மாதங்களாக காத்திருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

மேலும் இவர்களில் 45 அரசுத்துறை வங்கிகள் உள்ள அதிகாரிகளாக உள்ளனர். அத்துடன் 57 பேர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் அமைச்சக துறைகளில் இருந்து அனுமதிக்காக காத்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக மத்திய பணியாளர் அமைச்சகம் தொடர்பாக 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக ரயில்வே அமைச்சகம் தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அதேபோல கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கார்பரேஷன் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்ளிட வங்கிகளிலுள்ள 45 அதிகாரிகள் மீது 15 வழக்குகள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் அனுமதிக்காக தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. விதிகளின்படி ஒரு ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க 4 மாதங்களுக்குள் தகுந்த அமைப்புகள் மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையத்திற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.