சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.2% உயர்ந்து 87.9 டாலரை தொட்டுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும். ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மீதும் அண்மையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர காரணமாகி உள்ளது.
மேலும் துருக்கி - ஈராக் இடையே கச்சா எண்ணெய் போக்குவரத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பும் அதன் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொடுவதற்கும் வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்