இந்தியா

கொரோனா : ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

கொரோனா : ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

webteam

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறைகள் முடக்கப்பட்டு, ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அப்போது, ஏழைகள் ஒருவர் கூட பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கூறுகையில், “பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்க சிஆர்பிஎஃப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த சவாலான நேரத்தில் நம் தேசத்துடன் உறுதியாக நிற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சிஆர்பிஎஃப் அதன் சேவை மற்றும் விசுவாசத்தின் குறிக்கோளில் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.