சபரிமலை ஃபேஸ்புக்
இந்தியா

'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..' சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

PT WEB

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

சபரிமலையில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐயப்பன் கோயிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்குகிறது. அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

நீண்ட வரிசையில் இருமுடியுடன் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் அணியாய் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை விழா, கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக்காலத்தின் முதல் நாளில் இருந்தே , சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தொடர் கனமழை காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

இதனால், அப்போது வந்திருந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமலும், வரிசையில் காத்திருக்காமலும் சாமி தரிசனம் செய்தனர். தற்போது மழை ஓய்ந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.